அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனை தலைவராம் இயேசுவின் பொற்றாளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்.
1
எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு ரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்.
அழகாய்
2
வெள்ளை அங்கியை தரித்துக்கொண்டு
வெள்ளை குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று.
அழகாய்
3
தனிமையிலும், வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தை காத்தவர்கள்.
அழகாய்
4
ஆட்டுக்குட்டான் இவர் கண்ணீரை
அற அகற்றி துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப்பருக இயேசுதாமே.
அழகாய்