அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 497

நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்

1

நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம் - இந்த

பொய்யுலகை நம்ப வேண்டாம்

நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் - இந்த

பாழுலகை நம்ப வேண்டாம்.

2

உன்னைப் பெற்ற மாதாவெங்கே?

போஷித்த உன் தந்தை எங்கே?

போய் விட்டாரோ, போய் விட்டாரோ

உன்னை விட்டுப்போய் விட்டாரோ?

3

திருடனைப் போல் சாவு வரும்

தீக்கிடுவாய் நீயுமப்போ,

பாம்பின் வாயிற் தவளைபோல

பரிதபிப்பாய், பரிதபிப்பாய்

4

பிரேதமாக பாவியின்னை

தூக்கிப் போவார் கல்லறைக்கு

அங்கே யுன்னைச் சுட்டெரிப்பார்

நம்புவாயோ உலகைப் பின்னும்.

5

ஏசுநாதர் பாதந் தேடும்

மீட்பை இன்றே பெற்றுக் கொள்ளும்

குருசிற் றொங்கும் நேசர் பாரும்

குணமாக்குவார் இப்போ வாரும்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு