என்ன சுகம்! ஆஹா! என்ன சுகம்! என்
இரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம் அதைப்
பெற்று அனுபவித்தால் என்ன சுகம்!
1
பொன்னகர் வீதியில் எந்நேரம் பாடலாம்,
கின்னரம் தம்புரு வீணை இன்னோசை கேட்கலாம். -என்ன
2
வெற்றி பொன் வெண்ணாங்கி தரித்துக் கொள்ளலாம்
சுத்தப் பொன்னால் செய்த வீதியுலாவலாம்.- என்ன
3
ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம்
ஜீவகனியைப் புசித்துச் சுகிக்கலாம்.- என்ன
4
தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்
சிங்காசனத்தில் செளகசாயிருக்கலாம்.- என்ன
5
வாட்டம் பசிதாகம் பட்டினி சாவில்லை
கேட்டின் மனுபர் வந்தாடே இருப்பதில்லை. - என்ன
6
ஏசுவின் ரத்தத்தால் மீட்படைந்தவர்கள்
ஆசனமீர்ந்து ஜெயகீதம் பாடுவார்கள்.- என்ன