1
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றிப்
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடி,
பரமானந்த கீதமங்கே யெழுப்ப
நீ ஆங்கிருக்கப்பாயோ?
சொல் என்மனமே. (3)
2
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டனோ ரெவரும் அவரைச் சேர,
அன்பர் அன்பற்றல்லார் கண்ணீரும் துடைக்க
நீ ஆங்கிருக்கப்பாயோ?
சொல் என்மனமே. (3)
3
பேதுரு பவலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்,
இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ ஆங்கிருக்கப்பாயோ?
சொல் என்மனமே. (3)
4
ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடியணிந்திலங்கிடுவும்
தேவ சேயர்களா யெல்லாரும் மாற
நீ ஆங்கிருக்கப்பாயோ?
சொல் என்மனமே. (3)
5
சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லை தனைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்ணலோகில் ஜொலிக்க
நீ ஆங்கிருக்கப்பாயோ?
சொல் என்மனமே. (3)
6
கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று
மன்னர் மணாள னேசுவை மணந்து ;
பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
நீ ஆங்கிருக்கப்பாயோ?
சொல் என்மனமே. (3)