1
இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்
2
பரம சுகங்களின் இனிய ரசம்
பரமேசனோடு நான் பானம் செய்வேன்.
3
பரம பிதா வெந்தன் கண்ணினின்று
அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்.
4
சத்துரு சேனைகள் அங்கே இல்லை
இயேசுவின் புத்திரர் மாத்திரமே.
5
தேவாட்குட்டியின் திருமணவி
சிறப்படனிலங்கும் தேசமது.
6
கேருபின் சேராபீன்கள் பாடவே
மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே.
7
சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதே
சொர்க்கலோக நாட்டுக்கோர் யிணையில்லையே.
8
பரிசுத்த ஆவியின் பரிங்கு நதி
பல பளென்றொழுகிடும் தேசமது.
9
ஜீவ விருட்சமங்க காற்றருகில்
மாதந்தோறும் புதுக்கனி தருமே.
10
நவரத்ன நிர்மித பட்டணத்தில்
இராப்பகல் சூரியன் இயேசு தாமே.