அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 481

ஓய்வு நாள் இது

ஓய்வு நாள் இது, மனமே, - தேவனின்

உரையைத் தியானஞ் செய் கவனமே

நேய தந்தையர் சேர்க்க குதவிய

நெறி இச் சுவிசேஷ வசனமே. - ஓய்வு

1

ஜீவ சுக புத்திர செல்வம் தந்தவர்

சேவடி உனக் கபயமே ;

மேவி அவர் கிருபாசனத்தின் முன்

வேண்டிக்கொள், இது சமயமே. -

ஓய்வு

2

ஆறு நாளுனக் களித்தவர், இளைப்

பாறி ஓய்நில் களித்தவர் ;

கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்

குறித்துனை இதற் கழைக்கிறார். -

ஓய்வு

3

கர்த்தர் ஆசனம்குறுக்கிக் கேள் இன்று

காலை நண் பகல் மாலையும்,

சுத்தம் விரும்புவோர் மாத்திரம் வந்து

துதிக்கத் தகும் இத் தேவாலயம். -

ஓய்வு

4

ஆத்ம தேசம் நீ கடவுட்ப் படைப்

பாற்ற நற்சபை நாளிதே ;

அறையிலே சமூசார ஜெபம் செய்வோர்

ஆண்டவர் பலனிதில் அதனமே. -

ஓய்வு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு