இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாயிருக்காதே
மெளனமாயிருக்காதே - நீ
1
அறுவடைக் காலத்தில் மெளனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மெளனமாயிருந்தால்
இரட்சிப்புத் தான் வருமோ.- இது
2
இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இது தானே
இந்த காலத்தில் மெளனமாயிருந்தால்
இரட்சிப்புத் தான் வருமோ?- இது
3
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?- இது