அல்லேலூயா துதி மகிமை என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்
ஆ... அல்லேலூயா (3)
1
சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடியே வருவாயா.- அல்லே
2
மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமனான
இயேசுவில் நிற்க வேண்டும்.-
அல்லே
3
சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடுவோம்.-
அல்லே