அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 471

ஏசுவுக்காய் தொண்டு செய்திடவே

ஏசுவுக்காய் தொண்டு செய்திடவே

ஏகமாய் எழும்பிடுவீர் சபையே

நாசமின் நானிலத்தில் வருதே,

1

தமக்கு முன்வைத்த மகிமை எண்ணி

தளராமல் பாடுகள் சகித்தவரை

நோக்கியே நாம் ஓடிடுவோம்

தாங்கியே காப்பாரே கடைசி வரை.- ஏசுவுக்காய்

2

பாவத்தில் மாஜனம் அழிகிறதே

லோகத்தின் ரட்சிப்பைக் கருதியே நாம்

நள்ளிரவோ நடுப்பகலோ

நறுங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவே.- ஏசுவுக்காய்

3

பேதுரு பவலும் ஸ்தேவானும் அன்று

பெரும் ரத்த சாட்சியாய் மரித்தது போல்

புறப்படுவோம் இயேசுவுக்காய்

போர் முனையில் ஜீவன் வைத்திடவே.- ஏசுவுக்காய்

4

ஒருவரும் கிரியை செய்ய இயலா

இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்

ஏகோபித்து எழும்பிடுவோம்

இயேசுவின் சத்தியம் சாற்றிடவே.- ஏசுவுக்காய்

5

மேகத்தில் ஏசுதான் தோன்றிடும் நாள்

வேகத்தில் நெருங்கிடும் காலமதில்

பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டே

பரமனுக்காய்க் கடும் சேவை செய்ய.- ஏசுவுக்காய்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு