எழும்பிடுவீர வாலிபரே
எடுத்திடுவீர் சிலுவை கொடியை
தேவாதி தேவன் செய்த நன்மைகளை
தேசமெங்கும் பரைசாற்றுவோம்.
1
பாவ பாரம் நீங்கி இளைப்பாறுதல் தந்தார்
சாப ரோகம் நீக்கி சுத்தமாக்கினார்
இரட்சிபின் வஸ்திரம் எனக்குத் தந்தார்
நீதியின் சால்வையை எனக்களித்தார்.- எழும்பிடுவீர
2
பரிசுத்த ஆவியின் வல்லமை தந்தார்
பரிசுத்த ஜீவியம் காண செய்தார்
அந்நிய பாஷைகளை பேச செய்தார்
தேவாலயாலே அபிஷேகித்தார்.- எழும்பிடுவீர
3
சத்தானின் மேல் அதிகாரம் தந்தார்
பாவங்கள் ஜெயிக்க வல்லமை தந்தார்
தேனிலும் இனிய வேதம் தந்தார்
தாயினும் மேலாய் நம்மை தேற்றுவார்.- எழும்பிடுவீர
4
மேகங்கள் மீதினில் வந்திடுவீரே
மறுரூபமாகி நம்மை அழைத்து செல்வார்
ஆயிரம் வருட அரசாட்சியில்
ஆயத்தமாக நீயும் ஓடிவா.- எழும்பிடுவீர