அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 469

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

விசுவாசத்தில் முன் நடப்போம்

இனி எல்லாருமே அவர் பணிக்கனவே

ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்.

1

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்

இயேசு மறைந்தக்குள் அழைத்திடுவோம்

அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்

இராஜபாதையைச் செம்மையாக்குவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே

அதி வேகமாய் செயல்படுவோம்.

-இயேசு

2

சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்

இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்

இந்தப் பார் முழுதும் இயேசு நாமத்தையே

எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே

அதி வேகமாய் செயல்படுவோம்.

-இயேசு

3

ஆவி, ஆத்துமா, தேகம் அவர் பணிக்கே

இனி நான் அல்ல அவரே எல்லாம்

என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்

அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே

அதி வேகமாய் செயல்படுவோம்.

-இயேசு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு