அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 47

புது கிருபை அளித்திடுமே

பல்லவி

புதிய கிருபை அளித்திடுமே

அனுதின ஜீவியத்தில்

கிருபை மேல் கிருபை அருளிச் செய்து

கிருபையில் பூரணமாக்கச் செய்யும்.

1

ஆத்துமமே என் முழு உள்ளமே

ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பாய்

தினம் அதிகாலையில் புது கிருபை

அளித்து நீர் வழி நடத்தும்.

2

கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த

கிருபையின் பாத்திரமாக்கிடுமே

கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே

கிருபைகள் ஈந்திடுமே.

3

சோதனை வியாதி நேரங்களில்

தாங்கிட உமது கிருபை தாரும்

கிருபையில் என்றும் பெலனடைந்து

கிறிஸ்துவில் வளரச் செய்யும்.

4

சோர்ந்திடாமல் நல் சேவை செய்ய

கிருபையின் ஆவியை ஊற்றிடுமே

நல்ல போராட்டத்தைப் போராட

கிருபைகள் அளித்திடுமே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு