அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 461

சீயோன் பாதையில் செல்லுகின்ற

1

சீயோன் பாதையில் செல்லுகின்ற

இயேசுவின் போர் வீரரே

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

இருண்ட இவ்வுலகிலே

2

ஊரார், இனத்தார் மத்தியில்

துன்பம் சகிப்பாயா?

மூர்க்கர் கோபிகள் நடுவில்

திடனாய் நிற்பாயா?

3

தாகத்தாலும், பசியாலும்

தோய்ந்தாலும் நிற்பாயா?

அவமானங்கள் வந்தாலும்

சிலுவை சுமப்பாயா?

4

பாவாத்மாக்களா குணப்பட

நீ தத்தம் செய்வாயா?

கோழை நெஞ்சர் திடப்பட

மெய் யுத்தம் செய்வாயா?

5

லோகத்தார் மாண்டு போகிறார்?

மெய் வீரர் இல்லாமல்

இதோ மீட்பர் அழுகிறார்,

தொங்கி சிலுவையில்.

6

வாழ் நாள் எல்லாம் நிலை நின்று,

சிலுவை சுமப்பேன்;

தேவ அருளினால் வென்று ;

மா பாக்கியம் சேருவேன்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு