அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 462

சேவை செய்வோம், சேவை செய்வோம்

சேவை செய்வோம் - சேவை செய்வோம் - எம்

தேவனுக்கே இப்பாரினிலே உண்மையுடனே

1

கர்த்தன் இயேசுவே - கனியாய் உரைத்த

கடைசி கட்டளையே

உலக முழுவதும் உள்ள எவர்க்கும் உரைப்பீர்

செய்தி என்றே

இருள் அற எங்குமே ஒளி - மங்கிடாமலே

தங்கி நிலைக்க.-

சேவை

2

அறுப்பு மிகுதி ஆட்கள் குறைவு

அழைப்பை ஏற்றுக் கொள்வோம்

மரணம் வரினும் மறுராதழைப்போம் மகிழ்ச்சி

கொண்டிருப்போம்

பறன் வரம் என்று நிலைக்க பயமின்றியே

பணிபுரிவோம்.-

சேவை

3

எட்டிக்கிலும் எட்டி நடப்போம்

வெற்றி முழங்கிடுவோம்

சற்றும் கலங்கோம் பற்றுவிடுப்போம் - முற்றும்

கலைந்திடுவோம்

வெற்றி கொடி பற்றி பிடித்து வெற்றி உயர்த்தி

நின்று பாடுவோம்.-

சேவை

4

தமிழர் வாழும் பகுதிக் கெல்லாம்

தமிழர் சென்றிடுவோம்

தயகமின்றியே தவறாதழைக்க தத்தம்

செய்திடுவோம்

தனிமையாய் நின்ற போதிலும் தளராமலே

உழைத்திடுவோம்.-

சேவை

5

எந்த நாட்டிலும் எம்மொழியிலும்

எந்த நிலைமையிலும்

சொந்த முடனே என்னவரினும் சான்று

சாற்றிடுவோம்.

அங்கும் இங்கும் எங்கும் விளர்ந்தே உண்மையுடனே

உழைத்திடுவோம்.-

சேவை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு