இதோ அடியேனிருக்கிறேன் - என்னை அனுப்பும்
ஏசுவே, இப்போதே போகிறேன்.
இதோ போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கு
எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம்
செய்திடுவேன் - இதோ
1
மலைகள், பள்ளங்கள் தாண்டியோ - மா கஷ்டமான
வனங்கள், கடல்கள் நடந்தோ
தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படி
சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய் சென்றிடுவேன்,
-இதோ
2
வறியர் அறிவீனருக்கும், - மாதுஷ்டருக்கும்,
வணங்காக் கழுத்துளோருக்கும்,
அறிவி என் நாமம் என்று அடியேனை எவும்போது
சரியென்றிணங்கி எல்லா சனத்தையும் தேடிப் போவேன்.
-இதோ
3
வயல் நிலங்கள் இப்பொழுதே - அறுப்புக்கேற்க
வளமாய் விளைந்திருக்குதே ;
நயமான வேலையாட்கள் ஞாலமதில் தேடுகின்றீர் ;
பயமின்றி என்னை உந்தன் பாதமதில் ஒப்புவித்தேன்.
-இதோ
4
உலக முடிவு மட்டுமே - சகல நாளும்
உங்களோடிருப்பேன் என்றீரே,
மலைமேலே நீர் கொடுத்த மாபெரிய கட்டளையைத்
தலைமேலே கொண்டிடுப்போது தரணியில் ஏகிடுவேன்.
-இதோ