அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 456

அழைத்தீரே இயேசுவே

அழைத்தீரே இயேசுவே

அன்போடே என்னை அழைத்தீரே

ஆண்டவர் சேவையிலே மாற்றிபேனே

ஆயத்தமானேன் தேவே.

1

என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே

என் உயிர் தந்தேன் மண்ணுயிர்க்கே

என துயர தொனியோ இதை யார்இன்று கேட்பாரோ

என் காரியமாக யாரை அழைப்பேன்

என்றாரே வந்தேனிதோ.- அழைத்தீரே

2

என்னை தான் தீங்கு நான் இழைத்தேன்

என்னை விட்டபோடும் என் ஜனமே

எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ

என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்

எப்படி நான் மறப்பேன்.- அழைத்தீரே

3

ஆதி விஸ்வாசம் தங்கிடவே

ஆண்டவர் அன்பு பொங்கிடவே

ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே

நல் பூரண தியாகப் பாதை நடந்தே

நன்றியுடன் உழைப்பேன்.- அழைத்தீரே

4

எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே

ஏழை ஜனத்தை மீட்டிடுமே

எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே

என் பிராணனைக்கூட நேசித்திடாமல்

என்னையும் ஒப்படைத்தேன்.- அழைத்தீரே

5

ஆடம்பரங்கள் மேட்டிமைகள்

ஆசாபாசங்கள் பெருகிடுதே

ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே

ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க

ஆண்டவரே இரங்கும்.- அழைத்தீரே

6

பாக்கியமான சேவையிதே

பாதம் பணிந்தே செய்திடுவேன்

ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருக வரை

அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து

ஆண்டவரை அடைவேன்.- அழைத்தீரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு