அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 458

உலகோர் உன்னைப் பகைத்தாலும்

1

உலகோர் உன்னைப் பகைத்தாலும்

உண்மையாய் அன்பு கூறுவாயா

உற்றார் உன்னை வெறுத்தாலும்

உந்தன் சிலுவை சுமப்பாயா

உனக்காக நான் மரித்தேனே

எனக்காக நீ என்ன செய்தாய்.

2

உலக மேன்மை அற்பமென்றும்

உலக ஆஸ்தி குப்பை யென்றும்

உள்ளத்தினின்று கறுவாயா?

உழியம் செய்ய வருவாயா?

- உனக்காக

3

மேய்ப்பனில்லா ஆடுகள் போல்

மேய்கின்றார் பாவப்புல் வெளியில்

மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்

மேன்மையை நாடி ஓடுகின்றாயோ?

- உனக்காக

4

இயேசு என்றால் என்ன விலை?

என்றே கேட்டிடும் எத்தனைபேர்?

பிள்ளைகள் அப்பம் கேட்கின்றார்

ஜீவ அப்பம் கொடுப்பாயா?

- உனக்காக

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு