நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க
நித்திய மகிழ்ச்சி அடைவேன்
மத்திய ஆகாய மீதிலே
மன்னன் இயேசுவை காணுவேன்.
1
மணவாளன் டட்டும்போது ஆயத்தமே
மங்கிடாதே என்ன விளக்குகளே
ஜீவச்சுடர் ஒளியாய் ஜொலிப்பேன்
தேவப் பிதா தங்கும் மாளிகையில்.- நான்
2
சப்தன வெண்ண வஸ்திரம் ஆயத்தமே
சீருடனே நான் தரித்திடுவேன்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தில்
அன்பரோடே நானும் வீற்றிருப்பேன்.- நான்
3
சுவிசேஷ பாதத்ரசை ஆயத்தமே
சேவையிலே நான் அனிந்திடுவேன்
இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே
இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன்.- நான்
4
பாடுபட்டு மாரிக்கவும் ஆயத்தமே
பூரணிலே என் இயேசுவுக்காய்
பற்பல துன்பங்கள் சகித்திடுவேன்
பேரின்ப ராஜ்ஜியம் சேர்ந்திடுவேன்.- நான்
5
எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே
என் அரும இயேசு வருகிறாரே
ஆமென் என் இயேசுவே வாரும் என்றே
ஆவலுடன் எதிர் பார்த்திருப்பேன்.- நான்
6
பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே
பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன்
அல்லேலூயா பாடிப் பறந்திடுவேன்
ஆண்டவர் அழைத்திடும் நாளதிலே.- நான்