1
நல் மீட்பர் பட்சம் நில்லும்
ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி
போராடும் செய்யுமே!
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார் ;
பின் வெற்றி கீர்த்தி கூடி
செங்கோலும் ஓச்சுவார்.
2
நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எக்காளம் ஊதுங்கள்
போர்கோலத்தோடு சென்று
மெய்விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி திறல்சேனை
பிசாசின் தீரர் சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
3
நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எவ்வீர கூரமும்!
நம்பாமல், திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஏயும்
கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுயீர்.
4
நல் மீட்பர் பட்சம் நில்லும்!
போராட்டம் ஓயுமே!
வெம்போரின் கோஷம், வெற்றி
பாட்டாக மாறுமே!
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற்கிரீடம் சூடுவார் ;
விண் லோக நாதரோடே
வீற்றிராசாளுவார்.