அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 449

உறக்கம் தெளிவோம்

உறக்கம் தெளிவோம்

உற்சாகம் கொள்வோம்

உலகத்தின் இறுதிவரை

கல்வாரி தொனிதான்

மழை மாறி பொழியும்

நாள் வரை உழைத்திடுவோம்.

1

அசுத்தம் களைவோம்

அன்பை அழைப்போம்

ஆவியில் அனலும் கொள்வோம்

அவர் படை ஜெயிக்க

நம்மிடை கருத்து

வேற்றுமையின்றி வாழ்வோம்.- உறக்

2

அச்சம் தவிர்ப்போம்

தைரியம் கொள்வோம்

சரித்திரம் சாட்சி கூறும்

இரத்த சாட்சிகள்

நம்மிடை தோன்றி

நாதனுக்காய் மடிவோம்.- உறக்

3

கிறிஸ்துவுக்காய்

இழந்தவர் எவரும்

தரித்திரர் ஆனதில்லை

இராஜ்ஜிய மேன்மைக்காய்

கஷ்டம் அனைந்தோர்

நஷ்டப்பட்டதில்லை.- உறக்

4

உயிர் பெறுவீர்

ஒன்று கூடுவீர்

உலர்ந்த எலும்புகளே

நீங்கள் அறியா

ஒருவர் உங்கள்

நடுவில் வந்துவிப்பார்.- உறக்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு