அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 448

யுத்தம் செய்வோம், வாரும்

வெற்றி வேந்தன் முன்னே போகிறார்

1. யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே!

இயேசு சேனைக் கர்த்தர் பின்னே செல்வோமே!

வெற்றி வேந்தராக முன்னே போகிறார்ää

ஜெயக்கொடி ஏற்றி போர் நடத்துவார்

யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே!

இயேசு சேனைக் கர்த்தர் பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வீரர்காள் நீர் வெல்ல முயலும்ää

பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!

சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்

நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்

3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்

பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்!

கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே

விசுவாசம் அன்பு நம்பிக்கை ஒன்றே!

4. கிரீடம் இராஜ மேன்மை யாவும் சிதையும்

கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்!

நரகத்தின் வாசல் ஜெயங் கொள்ளாதே

என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே!

5. பக்தரே ஒன்றாக கூட்டம் கூடுமேன்

எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!

விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே!

கீர்த்தி புகழ் மேன்மை என்றும் பாடுமே!

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு