அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 447

என் இயேசுவே நான் என்றும்

என் இயேசுவே நான் என்றும்

உந்தன் சொந்தம்

என் இராஜனே அனுதினமும்

வழி நடத்தும்.

1

உலையான சேற்றினின்றே

தூக்கியே நிறுத்தினீரே

உந்தனை நான் மறவேன்

உந்தனைப் போற்றிடுவேன். -என் இயேசுவே

2

அலைந்தோடும், கடல்தனை

அடக்கியே அமர்த்தினீரே

வார்த்தையின் வல்லமையை

என்றுமே காணச்செய்யும். -என் இயேசுவே

3

தாயினும் அன்பு வைத்தே

தாங்கியே காப்பவரே

ஜீவிய காலமெல்லாம்

உந்தனைப் பின் செல்லுவேன். -என் இயேசுவே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு