என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்வினில் குறைகள் என்பது ஏது?
1
என்னை அவர் பசும்புல் பூமியிலே என்நேரமும்
நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் - ஆகா
என்றென்றும் இன்பமல்லவா. -என் மேய்ப்பராய்
2
என்னோடவர் நடந்திடும் போதினிலே
ஆங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியில்லவா. -என் மேய்ப்பராய்
3
என்னையவர் அன்பால் நிறைப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
என் உள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுவேன். -என் மேய்ப்பராய்