எப்படி பாடுவேன் நான் - என
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முடுவும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் (2)
1
ஒரு வழி அடையும்போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலே என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ (2)
2
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அன்பரின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன். (2)
3
கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்தீர்
கடுகளவும் குறைவைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர் (2)