அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 441

துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி

மகிழ்வோம் மகிபனை போற்றி

மகிமை தேவ மகிமை

தேவ தேவனுக்கே மகிமை.

1

தேவன் நம்மை வந்தடையச் செய்தார்

தம்மை என்றும் அதற்காகத் தந்தார்

அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்

அடைக்கலம் கொடுத்திடுவார். - துதிப்போம்

2

அஞ்சிடேனே இருளிலே என்றும்

நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்

பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்

பயந்திடேன் ஜெயித்திடுவேன். - துதிப்போம்

3

தேவன் எந்தன் அடைக்கலமாமே

ஒரு போதும் பொல்லாப்பு வராதே

சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே

விடுதிக் காத்திடுவார். - துதிப்போம்

4

கப்பிடும் வேலைகளிலே என்னை

தப்பவிக்க சீக்கிரமாய் வந்தார்

சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே

சர்ப்பங்களை மிதித்திடுவேன். - துதிப்போம்

5

பாதம் கல்லில் என்றும் இடறாமல்

கரங்களில் தாங்கிடுவார் தூதர்

ஒருபோதும் வாதை என் கூடாரத்தை

அணுகாமல் காத்திடுவார். - துதிப்போம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு