ஆதாரம் நீர் தானைய்யா - என்
ஆதாரம் நீர் தானைய்யா
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணர் நீர் தானைய்யா
1
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை- ஆனாலும்
ஏனோ நிம்மதி இல்லை
அமைதியை குலைக்கின்றதே. - ஆதாரம்
2
உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இன்னாள் வரையில்
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதியும் கலைக்கின்றதே. - ஆதாரம்
3
இயேசுவின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகு நாள் தான் ஆசை
உள்ளத்தை தந்தேன் நிம்மதி கண்டேன்
சாட்சியும் கழறிடுவேன். - ஆதாரம்