உன்னை அதிசயம் காணச் செய்வேன்
அற்புதம் கண்டிடுவாய்
ஒன்று வாக்களித்தார் தேவன்
ஒன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
சங்கடமும் பிளந்தே வழிவிடும்
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடையூறெல்லாம் இன்றே மறைந்திடுமே. - உன்னை
குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே. - உன்னை
வழி நடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வானந்திரமே வழியே வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே - உன்னை