அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 20

தேவனைத் துதிப்பதும்

பல்லவி

தேவனைத் துதிப்பதும்

கீர்த்தனம் பண்ணுகிறதும் - நல்லது.

1

எருசலேமைக் கட்டியே

கரிசனையாய்க் காக்கிறார்,

துரத்துண்ட இஸ்ரவேலரை

கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார்.

-

2

இதயம் நொருங்குண்டோர்களை

மிதமாய்க் குணமாக்குகிறார்,

நறுங்குண்டோர் காயங்களை

அருமையாய்க் கட்டுகிறார்.

-

3

நட்சத்திரங்களின் இலக்கத்தை

அட்சயன் எண்ணுகிறார்,

பட்சமாய் அவைகளை

உச்சரித் தழைக்கிறார்.

-

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு