பல்லவி
தேவன் நமக்கடைக்கலமும் பெலனும்
துணையுமானவர் - ஆபத்தில்
அனுபல்லவி
ஆகையால் பூமிநிலை மாறினாலும்
மலைகள் சாய்ந்தாலும் - ஆபத்தில்.
1
பூமியின் ஜலங்கள் கொந்தளித்தாலும் அதின் பெருக்கினால் - பயப்படோம்
பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம்.
- ஆபத்தில்
2
ஒரு நதியுண்டு அதின் நீர்க்கால்கள் தேவன் நகரத்தையும் - உள்ளத்தை
மானவர் வாசம் பண்ணும் ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.
- ஆபத்தில்
3
அதன் நடுவில் தேவன் இருக்கிறார் அது அசையாது - தேவன்
அதிகாலையிலே அதற்கு சகாயம் பண்ணுவார்.
- ஆபத்தில்