அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 21

தேவனைத் துதியுங்கள்

பல்லவி

தேவனை துதியுங்கள் - எப்பொழுதும்

தேவனை துதியுங்கள் - ஆ,ஆ,ஆ

1

அவர் வல்லமை விளங்கும் - ஆகாய விரிவை பார்த்து துதியுங்கள் - எப்பொழுதும்.

2

அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள் - எப்பொழுதும்.

3

மாட்சிமையான மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள் - எப்பொழுதும்.

4

எக்காள தொனியுடன் அவரைத் துதியுங்கள் வீணை சுரத்துடனே - எப்பொழுதும்.

5

தம்புரு நடனத்தோடும் துதியுங்கள் யாழும் தீங்குழலோடும் - எப்பொழுதும்.

6

ஓசை கைத்தாளங்களோடும் துதியுங்கள் பேரோசைக் கைத்தாளத்தோடும் - எப்பொழுதும்.

7

சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா ஆமென் - எப்பொழுதும்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு