அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 18

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

பல்லவி

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்.

1

பயத்தோடல் நல் பக்தியோடே

தேவனை ஆராதிப்போம்

வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்.

— தேவ

2

ஆபத்து நாளிலே அரணாம் கோட்டை

நித்திய கண்மலையே

யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே.

— தேவ

3

இராப்பகலாய் தன் கண்மணிபோல்

தூங்காது காப்பாரே

தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்.

— தேவ

4

உலகின் முடிவு வரைக்கும் - நான் உன்னோடிருப்பேன் என்றாரே

அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்.

— தேவ

5

சாத்தானின் கோட்டை தகர்ந்தொழிய ஏகமாய் துதித்திடுவோம்

சாத்தானை ஜெயித்த நம் இயேசு நமக்குண்டே.

— தேவ

6

ஓசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே

ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்.

— தேவ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு