பல்லவி
விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.
1
துயரையது நீக்கிக் காயந் தீர்த்துக் குணப்படுத்தும்;
பயங்கள் யாவும், யேசுவென்றால் பறந்தோடியே போகும்.
2
காயப்பட்ட இருதயத்தைக் கழுவி சுத்தப்படுத்தும்;
தியக்கமுள்ள நெஞ்சையது மயக்கமின்றி விடுக்கும்.
— விசு
3
பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே ;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்த
பெயரே
— விசு
4
எல்லை இல்லாக் கிருபைத்தீரள் ஏற்று நிறைந்திருக்கும் ;
எல்லா நாளும் மாறாச் செல்வம் யேசுவென்ற பெயரே.
— விசு
5
என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே ;
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக் கொள்ளும் கோவே.
— விசு