அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 182

வானம் பூமி யாவற்றிலும்

வானம் பூமி யாவற்றிலும் - யேசு மேலானவர்;

மனிதர், தூதர், பேய்தானும் அவர் முன்விழுவர்.

பல்லவி

நான் நம்புவேன், நான் நம்புவேன், யேசு எனக்காய் மரித்தார்.

பாவம் நீங்க சிலுவையில் ; உதிரம் சிந்தினார்.

1

இரட்சகர் உயிர் விட்டதும் - எந்தனுக்காகவே ;

வேறெந்த வாக்குவாதமும் - வேண்டியதில்லையே.

2

பாவியின் பயம் யாவையும் - நீக்கும் நாமமிது ;

நரகத் தண்டனையையும் - தொலைத்திடும் இது.

3

பாவச் சங்கிலி யாவையும் தறிப்பார் என்னேசு;

வேதாளத்தின் தலையையும் - நசுக்குவாரேசு.

4

பாவத்தில் மாளும் யாவர்க்கும் - உயிரளிப்பாரே ;

பெலனற்ற ஆத்மாவுக்கு - சக்தி கொடுப்பாரே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு