வாழ்த்துகிறேன், வாழ்த்துகிறேன், வாழ்த்துகிறேன், நான்
என் ரட்சகனை நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்.
1
மாட்டுத் தொழுவில் பிறந்த மகிமையின் ராஜா
மனுஷரூபம் எடுத்த உம்மை வாழ்த்துகிறேன் நான்.
2
தேவரூபமான யேசு தேவகுமாரா!
தாசரூபம் தரித்த உம்மை வாழ்த்துகிறேன் நான்.
3
பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தோரே!
இந்தப் பாரி லும்மையே நினைத்து வாழ்த்துகிறேன் நான்.
4
சிலுவையைச் சுமந்து கொண்டு நடந்து போனவா!
திருப்பாத மிரண்டும் முத்தம் செய்து வாழ்த்துகிறேன் நான்.
5
சிலுவையில் தொங்கி மரித்து உயிர்த்தெழுந்தோரே!
நித்யம் ஜீவிக்கிற உம்மை வாழ்த்துகிறேன் நான்.
6
ஆரவாரத்தோடு தாமே வானத்திலிருந்து
திரும்ப வருகிறவரை வாழ்த்துகிறேன் நான்.
7
என்றைக்கு நான் வந்து காண்பேன் திருமுகத்தையே
நோக்கி நோக்கி வாஞ்சிக்கிறேன் நின்வரவுக்காய்.
8
நின்வரவில் முன்னணியில் நின்றிடுவேன் நான்
வாழ்த்தி வாழ்த்தி நின்றிடுவேன் நின்வரவில் நான்.