பல்லவி
போற்றுவோமே! போற்றுவோமே!
எம் தேவனை இவ்வேளையிலே - நன்றியுடனே.
1
தூங்கன் இயேசுவே தூயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிட வேணும்.
— போற்று
2
ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த என்னையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதனி லென் பாவம் எறிந்த
அன்னன உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மண்ணதினிலே.
— போற்று
3
பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேந்தனே
தூயா நேயா காயம் மாற்றியே
கருணா நிதியே பரிகாரியே.
— போற்று
4
பாரில் என்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி சந்தி
அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க.
— போற்று
5
பூர்ணராகவே பூவில் வாழ்ந்திட
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்.
கோனே தேனே கோதில்லாதோனே
கானம் பாடியே துதித்திடுவேன்.
— போற்று