போற்றும்! போற்றும்! புண்ணியநாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனஞ் செய்ய,
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
ஏசு நாதர் நம்மையும் தாங்குவார்.
1
போற்றும்! போற்றும்! தேவகுமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்!
2
போற்றும்! போற்றும்! புண்ணியநாதரைப் போற்றும்!
பாவம் நாசம் செய்விக்க முயன்றார்;
பாடுபட்டு ப்ராணத் தியாகமுமாகி
வான ராஜ்ய வாசலைத் திறந்தார்;
மா கர்த்தாவே! ஸ்தோத்திரம் இன்றும் என்றும்!
வாழ்க! வாழ்க! ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா! மாசணுகா பரஞ்சோதி!
வல்ல தேவா, கருணை நாயகா!
3
போற்றும்! போற்றும்! புண்ணியநாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்,
போற்றும்! போற்றும்! ஏக மகத்துவமாக!
ஆட்சி செய்வார் நித்திய காலமும்;
ஏசு ராஜா, மாட்சிமையோடு வந்து,
ஏசு ஸ்வாமி பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் க்ரீட்ததைச் சூடி
ஜோதியாகப் பாலனம் பண்ணுவேன்.