அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 17

தேவ கிருபை என்றுமுள்ளதே

பல்லவி

தேவ கிருபை என்றுமுள்ளதே

அவர் கிருபை என்றுமுள்ளதே

அவரைப் போற்றித் துதித்துப் பாடி

அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்.

1

நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல் கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே.

- தேவ

2

சத்துரு சேனை தொடர்ந்து சூழ்ந்திட பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு முன் சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே.

- தேவ

3

அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே.

- தேவ

4

காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே.

- தேவ

5

வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் வீரன் நெகேமியா ஆவியை அளித்தே திடநம்பிக்கை தைரியம் ஈந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளதே.

- தேவ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு