அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 178

போற்றி துதிப்போம் எம்

போற்றித் துதிப்போம்எம் தேவ தேவனை

புதிய கிருபையுடனே

நேற்றும், இன்றும், என்றும் மாறா

ஏசுவை நாம் என்றும் பாடித் துதிப்போம்.

பல்லவி

இயேசு வென்னும் நாமமே - என்

ஆத்துமாவின் கீதமே - என் நேசரேசுவை

நான் என்றும் போற்றி மகிழ்ந்திடுவேன்.

1

கோர பயங்கரமான புயலில்

கொடிய அலையின் மத்தியில்

காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்ததனைத்த

அன்பை என்றும் பாடுவேன்.

— இயேசு

2

யோர்தான் நதி போன்ற சோதனையிலும்

சோர்ந்தழிந்து மாளாதே

ஆர்ப்பின் ஜெயத் தொனியோடே பாதுகாத்த

அன்பை என்றும் பாடுவேன்.

— இயேசு

3

தாய் தன் பாலகனையே மறப்பினும்

நான் மறவேன் என்று சொன்னதால்

தாழ்த்தி என்னை அவர் கையில் ஈந்து

ஜீவ பாதை என்றும் ஓடுவேன்.

— இயேசு

4

பூமியகிலமும் சாட்சியாகவே

போங்களென்ற கட்டளையதால்

ஆவி ஆத்துமாவும், தேகம் யாவுமின்றி

ஈந்து தொண்டு செய்குவேன்.

— இயேசு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு