பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ளம் இரைச்சல் போலே.
இயேசுவே ஆத்மநேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர்.
1
காட்டு மரங்களில் கீச்சலிபோல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்ப ரசத்திலும் அதிமதுரம்.
— இயேசுவே
2
அவர் இடதுகை என் தலை கீழ்
வலகரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே.
— இயேசுவே
3
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்.
— இயேசுவே
4
என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே.
— இயேசுவே
5
நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டு குட்டியின் மணநாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே.
— இயேசுவே