அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 176

நிகரே இல்லாத சர்வேசா

பல்லவி

நிகரே இல்லாத சர்வேசா

திகழும் ஒளிப் பிரகாசா.

அனுபல்லவி

துதி பாடட இயேசுநாதா

பதினாயிரம் நாவுகள் போதா.

1

தூங்கன் இயேசு மெய்ப் பரிசுத்தரே

எங்கள் தேவனைத் தரிசிக்கவே

துதிகளுடன் கவிகளுடன்

தூய தூயனை நெருங்கிடுவோம்.

— நிகரே

2

கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல

கையின் சித்திரம் தெய்வமல்ல

ஆவியோடும் உண்மையோடும்

ஆதி தேவனை வணங்கிடுவோம்.

— நிகரே

3

பொன், பொருள்களும் அழிந்திடுமே

மண்ணும் மாயையும் மறைந்திடுமே

இதீனும் விலை பெரும் பொருளே

இயேசு ஆண்டவர் திருவருளே.

— நிகரே

4

தேவ மைந்தனாய் அவதரித்தார்

பாவ சோதனை மடங்கடித்தார்

மனிதனுக்காய் உயிர்கொடுத்தார்

மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்.

— நிகரே

5

கொந்தளித்திடும் அலைகளையும்

கால் மிதித்திடும் கர்த்தரவர்

அபங்கிடுமே அதட்டிடவே

அக்கறை நாமும் சேர்ந்திடவே.

— நிகரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு