அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 175

தோத்திரம் செய்வேனே

பல்லவி

தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்

தோத்திரம் செய்வேனே.

அனுபல்லவி

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த

பார்த்திபனை, யூதக் கோத்திரனை, என்றும்

— தோத்திரம்

1

அன்னைமரி சுதனை, - புல்மீது

அமுதுக் குமுதவனை,

முன்னணை மீதுற்ற சின்னக்குமாரனை,

முன்னுரை நாற்படி இந்நிலத் துற்றோனை.

— தோத்திரம்

2

கர்த்தை பொதிந்தவனை, - வானோர்களும்

வந்தடி பணிபவனை,

மந்தையர்க் கானந்த மாட்சி யளித்தோனை,

வானபரன் என்னும் ஞானகுணவானை.

— தோத்திரம்

3

செம்பொன் னுருவானை, - தேசிகர்கள்

தேடும் குருவானை,

அம்பர மேவிய உம்பர் கணத்தோடு

அன்புபெற நின்று லைப்பொன் மலர்தூவி.

— தோத்திரம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு