பல்லவி
தூய தேவனை துதித்திடுவோம்
நேயமாய் நம்மை நடத்தினாரே
ஓயாப் புகழுடன் கீதம்பாடி தினம்
போற்றியே பணிந்திடுவோம்.... அல்லேலூயா.
1
கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
கனிவுடன் நம்மை அரவணைத்தே
நம் கால்களை கன்மலையின்மேல்
நிறுத்தியே நிதம் நம்மை வழிநடத்தும்.
— தூய
2
யோர்தானைப் போல் வந்த துன்பங்களை
யேசுவின் பெலம் கொண்டு கடந்து வந்தோம்
அவர் கரத்தை பிடித்துக் கொண்டே
பரிசுத்த பாதையில் நடந்திடுவோம்.
— தூய
3
குழுக்குச் சமமாய் நம் வயது
திரும்பவும் வால வயதாகும்
புது நன்மையால் புது பெலத்தால்
நிறைப்பியே நம் வாயும் திருப்தியாகும்.
— தூய
4
தாவீதுக் கருளின மா கிருபை
தாசராம் நமக்குமே தந்திடுவார்
எலிசாவைப் போல் இருமடங்கு
வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார்.
— தூய
5
நலமுடன் நம்மை இது வரையும்
கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே
கண்மணி போல் கடைசிவரை
காத்திடும் கர்த்தரை போற்றிடுவோம்.
— தூய