பல்லவி
தந்தானைத் துதிப்போமே ; திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் நமக்கு கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிகமிகத்
— தந்
1
ஒய்யாரத்துச் சீயோனே, - நீயும்
மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து,
ஜயனேசுக்குளின் கைகைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவாயே, நாமும்.
— தந்
2
கண்ணாரக் களித்தாயே, - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து,
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனாமாரிபோற் பெய்துமே.
— தந்
3
சுத்தாங்கத்து நற்சபையே,- உன்னைத்
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து,
சத்துக் குலைந்துளனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர்வரும்.
— தந்
4
தூரந்தீர்ந்த சீயோனே, - உன்னைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி யலங்காரித்து உனை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை!
— தந்
5
சிங்காரக் கன்னிமாரே,-உம்
அலங்காரக் கும்மி யடித்துப் படித்து,
மங்காத உன் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்.
— தந்