பல்லவி
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்.
அனுபல்லவி
இயேசுவே நீர் பரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்.
1
பாவிகள் துரோகிகள் ஜயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் என் பாவம் போக்கவே
பாதகர் போல் தொங்கினீரல்லோ.
— இயேசுவே
2
ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீச செய்குவீர்.
— இயேசுவே