அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 172

திருப்பாதம் நம்பி

பல்லவி

திருப்பாதம் நம்பி வந்தேன்

கிருபை நிறை இயேசுவே

தமதன்பை கண்டடைந்தேன்

தேவ சமூகத்திலே.

1

இளைப்பாறுதல் தரும் தேவா

களைத்தோரைத் தேற்றிடுமே

சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்

சுகமாய் அங்குத் தங்கிடுவேன்.

— திருப்பாதம்

2

என்னை நோக்கி கூப்பிடு என்றீர்

இன்னல் துன்ப நேரத்திலும்

கருத்தாய் விசாரித்து என்றும்

கனிவோ டென்னை நோக்கிடுமே.

— திருப்பாதம்

3

மனமாற மாந்தன் நீரல்ல

மன வேண்டுதல் கேட்டிடும்

எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே

இயேசுவே உம்மை அண்டிடுவேன்.

— திருப்பாதம்

4

என்னைக் கைவிடாதிரும் நாதா

என்ன நிந்தை நேரிடினும்

உமக்காக யாவும் சகிப்பேன்

உமது பெலன் சந்திடுமே.

— திருப்பாதம்

5

உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே

உண்மையாய் வெட்கம் அடைவேன்

தமது முகப் பிரகாசம்

தினமும் என்னில் வீசிடுதே.

— திருப்பாதம்

6

சத்துரு தலை கவிழ்ந்தோட

நித்தமும் கீரியை செய்திடும்

என்னைத் தேற்றிடும் அடையாளம்

இயேசுவே இன்று காட்டிடுமே.

— திருப்பாதம்

7

விசுவாசத்தால் பிழைத்தோங்க

வீர பாதை காட்டினீரே

வளர்ந்து கனிதரும் வாழ்வை

விரும்பி வரம் வேண்டுகிறேன்.

— திருப்பாதம்

8

பலர் தள்ளின மூலைக்கல்லே

பரம சீயோன் மீதிலே

பிரகாசிக்கும் அதை நோக்கி

பதறாமலே காத்திருப்பேன்.

— திருப்பாதம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு