பல்லவி
தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறொன்றும் வேண்டாம்
உயிருள்ளவரை நின் புகழ் பாட வேண்டும்.
1
துயரங்கள் பாரினில் அடைந்தவரே - துன்பங்கள் தாங்கி பெலன் தருமே.
- பாரில்
2
பாரோரின் நோய்களை தீர்த்திட்டவர் - பாவி என் பாவ நோயை தீர்த்திடுமே.
- பாரில்
3
சீடரின் கால்களை கழுவினவர் - செந்நீரால் என் உள்ளம் கழுவிடுமே.
- பாரில்
4
பரலோகில் இடமுண்டு என்றவரே - பரிவாக எனக்கும் ஓர் இடம் தருமே.
- பாரில்