அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 167

சுந்தர ரட்சகனே

பல்லவி

சுந்தர ரட்சகனே - எங்கள்

சொந்த சுதந்தரனே

அனுபல்லவி

எந்த நேரமுமே உந்தனை வேண்டியே

இந்தத் துதி நன்றியே.

— சுந்தர

1

ராஜாதி ராஜா நீரே - எங்கள்

சாரோனின் ரோஜா நீரே

வாரே னென்றவரே வல்ல தேவன் நீரே

பாரெயம்மையும் நீரே.

— சுந்தர

2

வியாதிக்காரர் வைத்தியனே - யூத

ஜாதியில் ஜெனித்தோனே

நாதியான நாயேன் விதவையின் மகனை

ஓதியெழுப்பினோனே.

— சுந்தர

3

சென்னி சிவந்துள்ளோனே - மாது

கன்னியில் பிறந்தோனே - பாவ

மன்னிப்பளிப்போனே விண்ணினில் சேர்ப்போனே

உன்னியெம்மைப் பார்ப்போனே

— சுந்தர

4

வான மடங்காதவர் - இக்

கானகமே வந்தவர் - ஜீவ

பானங் கொடுத்தே பசியைத் தீர்த்தவர்

ஐன னென்னிளுள்ளாவர்.

— சுந்தர

5

மூப்பர்கள் சுற்றி நின்று - எங்கள்

மன்னவன் இயேசுவையே

ஆர்ப்பரித்து துதிக்க - அடியானும்

உம்மைத் துதிப்பேன்.

— ஸ்தோத்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு