அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 164

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

பல்லவி

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

இராஜாதி இராஜன் தேவாதிதேவன்

இயேசு கீரிஸ்துவுக்கே மகிமை

1

பரிசுத்தவான்கள் சபை நடுவே

தரிசிக்கும் தேவ சமூகத்திலே

அல்லேலூயா அல்லேலூயா

ஆவியில் பாடி மகிழ்வோம்

ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்.

— கோடா

2

கிருபாசனத்தண்டை நெருங்குவோம்

திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்

அல்லேலூயா அல்லேலூயா

கண்டேன் சகாயம் இரக்கமே

கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே.

— கோடா

3

குருவி பறவை வானம்பாடியே

கவலையின்றி பறந்து பாடுதே

அல்லேலூயா அல்லேலூயா

அற்புதமான சிறுவழிகரே

அந்த விசுவாசம் கற்றறிந்தோம்.

— கோடா

4

கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்

காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்

அல்லேலூயா அல்லேலூயா

ஆடை ஆகாரம் தேவை எல்லாம்

அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்.

— கோடா

5

கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்

கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்

அல்லேலூயா அல்லேலூயா

தேவக்குமாரன் வந்தீடும் நாள்

தூய முகம் கண்டு கெம்பீரிப்போம்.

— கோடா

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு