1
சந்தோஷ கீதம் எண்ணில் பொங்குதே
சர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார
பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே
பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்.
ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்
ஆண்டவர் சமூகம் என்னை தேற்றுதே
துன்பங்கள் யாவுமே தூரிதமாய் நீங்குதே
இன்ப ஏசு நாமத்தில்.
2
பேரின்ப கீதம் என்னில் பொங்குதே
போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்
சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்
சோர்ந்திழியாமல் என்னை காத்ததால்.- ஆர்ப்பரித்து
3
இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே
இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்
மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்
மா தேவ அன்பில் என்னைக் காத்ததால்.- ஆர்ப்பரித்து
4
ஆனந்தக் கீதம் என்னில் பொங்குதே
ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார்
ஆவலாய் விழித்தே ஆவியில் ஜெயித்தே
ஆயத்தமாய் நான்காத்து நிற்பதால்.- ஆர்ப்பரித்து
5
சீயோனின் கீதம் என்னில் பொங்குதே
சீக்கிரம் வந்தென்னைச் சேர்த்துக் கொள்ளுவார்
பொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்
பொன்மாளிகை நான் கிட்டச் சேர்வதால்.- ஆர்ப்பரித்து