பல்லவி
கல்வாரியின் தங்கமே கருணை நிறைந்த சிங்கமே
கண்ணைக் கவரும் கர்த்தனே சிலுவையின் நேசனே.
1
துதிக்கப்படும் தூயனே தூதருடன் வருபவனே
மாது மரியின் மைந்தனே சிலுவையின் நேசனே.
2
பாவிகட்காய் வந்தோனே பாசமே மிகுந்தோனே
தாவி இதோ வந்தோமே சிலுவையின் நேசனே.
3
ஆசீர்வாதம் சந்தோனே காசினியில் வந்தோனே
ஆயக்காரர் நண்பனே சிலுவையின் நேசனே.
4
ஐந்தப்ம் இரண்டு மீன்களினால் ஐயாயிரம் போஷித்தோனே
ஜயா இதோ வந்தோமே சிலுவையின் நேசனே.
5
தண்ணீரை ரசமாக்கினோனே தண்ணீர்மேல் நடந்தோனே
எண்ணினைத சொல்வோனே சிலுவையின் நேசனே.
6
வியாதிகளை தீர்த்தோனே கபோதிகட்குக் கண்ணந்தோனே
நாதியுள்ளோரின் நாயகனே சிலுவையின் நேசனே.
7
அல்லேலூயாவின் அருகனே எல்லாரும் போற்றுபவனே
வல்லோனாய் வருபவனே சிலுவையின் நேசனே.